மருத்துவ கல்லூரி, புதுச்சேரி. (தற்பொழுது இங்கு சட்ட சபை இயங்குகிறது)


மருத்துவ கல்லூரி, புதுச்சேரி. (தற்பொழுது இங்கு சட்ட சபை இயங்குகிறது)

Posted in Photo(Archives)
Tags: கல்லூரி, கார்த்திக், சட்ட சபை, நிம்பன், பாண்டிச்சேரி, புதுச்சேரி, மருத்துவ, college, j, karthick, karthik, karthikeyan, medical, nimban, old, puducherry, vintage
இந்தோசின வங்கி, புதுச்சேரி. (தற்பொழுது யூகோ வங்கி இங்கு செயல்படுகிறது)

Posted in Photo(Archives)
Tags: இந்தோசின, கார்த்திக், கார்த்திக்கேயன், நிம்பன், பாண்டிச்சேரி, புதுச்சேரி, பூங்கா, யூகோ, வங்கி, j, karthick, karthikeyan, nimban, old, pondicherry, puducherry, vintage
டுப்ளே சிலை, புதுச்சேரி கடற்கரை. (தற்பொழுது இவ்விடத்தில் நேரு சிலை உள்ளது)

Posted in Photo(Archives)
Tags: அயீ மண்டபம், கார்த்திக், கார்த்திக்கேயன், சிலை, டுப்ளே, நிம்பன், பாண்டிச்சேரி, புதுச்சேரி, duplex, j, karthick, karthikeyan, nimban, old, pondicherry, puducherry, statue, vintage
பீர் பாலம், புதுச்சேரி கடற்கரை

Posted in Photo(Archives)
Tags: கார்த்திக், கார்த்திக்கேயன், நிம்பன், பாண்டிச்சேரி, பீர் பாலம், புதுச்சேரி, புதுச்சேரி கடற்கரை, bridge, j, karthick, karthik, karthikeyan, le pier, nimban, old, port, puducherry, vintage
கலவை கல்லூரி, மிஷன் வீதி, புதுச்சேரி

Posted in Photo(Archives)
Tags: கார்த்திக், கார்த்திக்கேயன், நிம்பன், பாண்டிச்சேரி, புதுச்சேரி, மிஷன் வீதி, karthick, karthik, karthikeyan, Mission, old, pondicherry, puducherry, vintage
கலவை கல்லூரி, மிஷன் வீதி, புதுச்சேரி

Posted in Photo(Archives)
Tags: கலவை கல்லூரி, கார்த்திக், நிம்பன், பாண்டிச்சேரி, புதுச்சேரி, மிஷன் வீதி, Calve College, j, karthikeyan, Mission, nimban, old, pondicherry, puducherry, vintage
புதுச்சேரி கடற்கரை அதன் அடையாளமான காந்தி சிலை இல்லாமல்

Posted in Photo(Archives)
Tags: காந்தி, கார்த்திக், கார்த்திக்கேயன், சிலை, நிம்பன், பாண்டிச்சேரி, beach, gandhi, karthick, karthik, karthikeyan, old, puducherry, statue, vintage
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| « May | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
உலகத் தமிழ் மக்களுக்கு புதுச்சேரியின் கலாச்சாரம், பாரம்பரியம், பெருமை, பழக்க வழக்கங்கள் என சகல அம்சங்களையும் அலசும் இணையம்.
இத்தளம் வணிக நோக்கமில்லாமல் சேவையை குறிக்கோளாக கொண்டு செயல்படும்.

ஆசிரியர்
கார்த்திக்கேயன்.
இது சில முக்கியமான மின் புத்தகங்களின் தொகுப்பு அடங்கிய இணைப்பு பக்கம்.
Quotes Collection(எடுத்துக்கூறுகளின் தொகுப்பு)
இது ஊக்கம், தன்முனைப்பு ஆற்றல் மற்றும் உத்வேகம் தரக்கூடிய சில முக்கியமான எடுத்துக்கூறுகளின் தொகுப்புகள் அடங்கிய இணைப்பு பக்கம்.
1673ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச்சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன.
1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன.
இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே 'இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் 'நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்' (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்கள் அவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது.
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் (ஹாலந்து நாட்டினர்), பிரஞ்சுக்காரர்கள் என பலவகையான ஐரோப்பியர்கள் புதுச்சேரியில் தம்முடைய வணிக வளாகத்தினை நிறுவி, அடுத்தடுத்து இப்பகுதியை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். கி.பி 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் போர்ச்சுக்கீசியர் தமது வணிக வளாகத்தை புதுவையில் அமைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆயிரத்து ஐநூற்று ஐம்பத்து மூன்ற்றாம் ஆண்டில் பரோஸ் (Barros) என்னும் போர்ச்சுக்கீசிய வரலாற்று ஆசிரியர் தம் நூலில் சோழமண்டல வணிகத்தளங்களாக நாகூர், திருமலைராயன்பட்டினம், திருமுல்லைவாயில், கொள்ளிடம், புதுச்சேரி, காலாப்பட்டு, கூனிமேடு, சதுரங்கப் பட்டினம், மைலாப்பூர் என்பதாகக் குறிப்பிடுகிறார். இவர்களுக்குப் பின் டச்சுக்காரர்கள் கி.பி.1616 இல் வணிக நிமித்தம் புதுவை வந்ததாகத் தெரிகிறது. ஆனால் நிலையாக தங்கியதாக சான்றுகள் இல்லை. இவர்களையடுத்துப் புதுவைக்கு வந்தவர்கள் டேனிஷ்காரர்கள். கி.பி.1639 ஆம் ஆண்டளவில் வணிக வளாகம் அமைத்ததாக ஆங்கிலேய ஆய்வாளர் பிரான்சிஸ் டே (Francis Day) என்பவரின் குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது. கி.பி. 1648 இல் பீஜப்பூர் படைகள் செஞ்சியைக் கைப்பற்றியதை அடுத்து டேனிஷ்காரர்கள் புதுவையை விட்டு வெளியேறினார்கள். பின்பு கி.பி. 1656 அளவில் இராமவேல் கிருஷ்ணப்ப நாயக்கரின் அழைப்பில் டச்சுக்காரர்கள் மீண்டும் வணிகம் செய்தார்கள்.
கி.பி. 1670 இல் ழான் பெப்பேன் (jean pepein) என்ற கப்பல் தலைவர் தலைமையில் ஒரு வணிகக் குழு புதுச்சேரியில் வணிக வளாகம் அமைக்க ஆய்வு செய்து பிரான்சுக்கு ஒரு சிறப்பறிக்கை அனுப்பியது. கி.பி. ஆயிரத்து அறுநூற்று எழுபத்து மூன்று, பிப்ரவரி 4ம் நாள், தெலாஹே (Dela Haye) என்ற கப்பல் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெலான்ழே தெ லெஸ்ப்பினேவும் (Dellenger de l Espenay) காவல்தலைவரும் புதுச்சேரியில் வந்திறங்கினர். இந்நாளே புதுச்சேரியின் வரலாற்றில் பிரஞ்சியர் ஆட்சி தொடக்கமாக அமைந்தது. அதன்பிறகு கி.பி.1675க்கு பின்னர் புதுச்சேரி பலவகையிலும் பிரஞ்சியர்களின் முக்கிய வணிகத் தலமாக மாறத் துவங்கியது. கி.பி. 1686 முதல்1706 வரை பிரான்சுவா மர்த்தேன் (Francois Martin) இயக்குநர் தலைவராகப் புதுச்சேரியில் தங்கியிருந்தார்.
இப்படியாக புதுச்சேரியில் பிரஞ்சியர்கள் ஆழ வேறூன்றினர். 1703ஆம் ஆண்டளவில் 700 யூரோப்பியர்கள், 30000 இந்தியர்கள் கொண்ட பிரஞ்சுக் குடியிருப்பு நகரமாக விரிவடைந்தது. புதுச்சேரியில் பெவாலியர் தெகூர்ஷான் (Beauvallior de courchant) என்ற ஆளுனர் காலத்தில் அடிமை வணிகமும் நடந்ததற்கான விவரங்களும் கிடைக்கின்றன. ஆளுனர் லெனுவாவின் (Lenoir)கட்டுப்பாட்டிலிருக்கும் போது பிரஞ்சியரின் நிர்வாகப் பகுதிக்குட்பட்ட, மய்யழி (Mahini) என்பதே பிரஞ்சியரின் மாகே என்றாயிற்று. இதுபோலவே 1731ஆம் ஆண்டளவில் ஏனாமும், அடுத்த ஆளுனரான துய்மா (Benoit Duima) காலத்தில் முதன்முதலாக காரைக்கால் பகுதியில் பிரஞ்சியரின் வணிக வளாகமும் உருவாக்கப்பட்டு 1739 பிப்ரவரி, 14இல் பிரஞ்சியர் ஆளுகைக்குட்பட்டது.
ஆளுநர் துய்மாவிற்கு அடுத்தபடியாக புதிய ஆளுராக பொறுப்பேற்ற ழோசேப் பிரான்சுவா துய்ப்ளே (Joseph Francois Duplex) என்பவரின் காலத்தில் தான் புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆட்சி வலுவாக வேறூன்றியது. பிரஞ்சிந்திய வரலாற்றில் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்த இவர் தனது அரசியல் திறமையாலும், பேராற்றலினாலும், பிரஞ்சுப் பகுதிகளை இந்தியாவில் மிகவும் வலுவுள்ளதாக்கினார். மற்ற ஆளுனர்களைப் போலல்லாது, இந்தியாவின் உள்நாட்டுச் சண்டைகளில் தலையிட்டு பிரஞ்சு ஆதிக்கத்தினை நிலை நிறுத்த முயன்றார். ஆங்கிலேயர்களும் இதே உத்தியைப் பின்பற்றியதால், இருவருக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன. 1750இல் அம்பத்தூர் வெற்றிக்காக முசபர் ஜங் வில்லியனூர், பாகூர் சார்ந்த முப்பத்தாறு ஊர்களை பிரஞ்சியருக்கு வழங்கினார். தக்காண சுபேதார் சலபத் சிங் வழுதாவூர் முதலான நூறு கிராமங்களை வழங்கினார். 1749 ஆண்டளவில் எண்பத்தோரு கிராமங்கள் அடங்கிய காரைக்கால் ஒட்டிய நான்கு மாகாணங்களும் அப்பொதைய தஞ்சை மன்னனான தவுஸ்த்கானிடமிருந்து துய்ப்ளேவால் வாங்கப்பட்டன. துய்ப்ளேவிடம் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த ஆனந்த ரங்கபிள்ளை எழுதிய பனிரெண்டு தொகுதிகளான தினப்படி நாட்குறிப்புகள் அக்கால வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன.
இதன் பின்னர் இந்தியாவிலும், யூரோப்பாவிலும் ஏற்பட்ட பல மோதல்களுக்குப் பின், புதுச்சேரியில் ஒப்பந்தங்கள் கையெழுதிடப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சியர்களுக்கும் மோதல்கள் முடிவுக்கு வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பல ஆளுனர்கள் புதுச்சேரிக்கு வந்து போயினர். பொறுப்பிலோ, மக்கள் வாழ்க்கை முறையிலோ குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏதும் ஏற்படவில்லை.
Blog at WordPress.com. Theme: ChaoticSoul by Bryan Veloso.